தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பிரபல சிங்கள நடிகர் தனது தற்கொலையை கைப்பேசியில் பதிவு செய்துள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
குறித்த நடிகர் நேற்று மாலை பன்னிப்பிட்டியில் அமைந்துள்ள தனது வீட்டில் இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
28 வயதுடைய தசுன் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட போது அவரது கைப்பேசியில் அனைத்தையும் பதிவு செய்திருந்த நிலையில் அந்த கைப்பேசியை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
அந்த கைப்பேசியில் தசுன் தற்கொலை செய்துக்கொண்ட விதம் பதிவாகியிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த பதிவுகள் மூலம் தசுன் இரண்டு முறை தற்கொலைக்கு முயற்சித்துள்ளார் என தெரியவந்துள்ளது.
அவருடன் நடிக்கும் சக நடிகர் ஒருவர் தசுனை சந்திப்பதற்காக வீட்டுக்கு வந்துள்ளார். இதன்போது வீட்டின் கதவு , ஜன்னல்கள் மூடப்பட்டிருந்தாக கூறப்படுகின்றது.
அத்துடன், வீட்டின் பின்புறத்திற்கு சென்று ஜன்னலின் ஊடாக பார்த்த போது, அங்கு தசுனின் உடல் மின் விசிறியில் தொங்கியபடி இருந்ததை பார்த்ததாக அந்த நபர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதன்போது, தான் தற்கொலை செய்துக்கொள்ளப் போவதாக அவர் கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிவிக்கப்படுகின்றது.
அந்த கடிதத்தில், தனது தற்கொலைக்கு எவரும் காரணம் இல்லை என கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து மரண விசாரணைகளின் பின்னர் சடலம் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், அவரின் தற்கொலைச் சம்பவம் காதல் தொடர்பு காரணமாக இடம்பெற்றுள்ளதா என்பது தொடர்பில் பிலியந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.