தியாகத் தீபம் திலீபனுக்காக பறவை காவடி எடுத்த யாழ். இளைஞன்!!

தாயக மண்ணை முத்தமிட்டு வீரகாவியம் படைத்த தியாகத் தீபம் திலீபனின் 30ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் இன்று பல இடங்களிலும், பல நாடுகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

kaii

அந்தவகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் யாழ். நல்லூரில் தியாகத் தீபம் திலீபனுக்கு நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.

இதன்போது, கைதடி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து நல்லூரில் அமைந்துள்ள திலீபன் நினைவிடத்துக்கு யாழ். இளைஞன் ஒருவர் பறவை காவடி எடுத்து வந்துள்ளார்.

காவடி எடுத்தல் என்பது கடவுள்களுக்காக மனிதனால் கொடுக்கப்படும் பக்தியின் வெளிப்பாடு, ஒரு நேர்த்திக்கடனாகும்.

அந்த வகையில் தியாகத் தீபம் திலீபனுக்காக ஒரு இளைஞன் பறவை காவடி எடுத்து வரும் காட்சியைப் பார்த்தபோது மக்கள் கண்களிலே கண்ணீரை வரவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.