ஹர்பஜன் சிங் கிண்டலுக்கு ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் கிளார்க் பதில் அளித்துள்ளார்.
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் ஆஸ்திரேலிய அணிக்கு முன்னாள் வீரர் மைகேல் கிளார்க் மீண்டும் அணிக்கு திரும்ப வேண்டும் என்று கிண்டலாக கூறியுள்ளார்.
இந்தியாவுடன், மோதிவரும் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வரிசை மிகவும் மோசமாக உள்ளது. இதனால் இந்திய அணிக்கு எதிரான முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தது.
இது குறித்து ஆஸ்திரேலிய அணியின் தலைவரான சுமித் கூட எங்கு தப்பு நடக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் கிண்டலாக, மேட், நீங்கள் உங்களுடைய ஓய்வு முடிவை திரும்பெற்று, அணிக்காக மீண்டும் விளையாட வேண்டும் என நினைக்கிறேன். சகாப்தமான ஆஸ்திரேலியா டாப் பேட்ஸ்மேன்களை உருவாக்கியது முடிந்து விட்டது என நினைக்கிறேன். தரமான பேட்ஸ்மேன்கள் இல்லை என்று பதிவேற்றம் செய்து இருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள கிளார்க், ‘இப்போதுதான் இதை பார்த்தேன். எனது வயதான கால்கள் ஏசிப் பெட்டிக்குள் உட்கார்ந்துகொண்டு இனிமையாக வர்ணனை செய்து கொண்டிருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.