இந்தியாவின் திரிபுரா மாநிலத்தில், மிக மிக அரிதான கண் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவன், தகுந்த சிகிச்சைகள் செய்துகொள்ளாததால் பார்வை இழந்தான்.
ஜைலியான் காய்பெங் என்ற இந்தச் சிறுவன், பிறக்கும்போதே மிக மிக அரிதாக ஏற்படும் கண் புற்றுநோயால் பாதிக்கப்பட்டான்.
இந்த நோயால் அவனது கண்கள் இமைகளின் அளவையும் தாண்டி வீங்கி விகாரமாகியதால், இமைக்கவும் முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டான்.
கண்ணின் வீக்கத்தாலும், இமைக்க முடியாத காரணத்தாலும் கண்களில் ஏற்பட்டுள்ள கடுமையான வலியால் காய்பெங் துடித்து வருகிறான்.
போதிய பண வசதி இல்லாததாலும், மருத்துவ உதவி கிடைக்காததாலும், பார்வையையும் இழந்துவிட்ட காய்பெங்கின் பெற்றோர் அவனது அழுகையை நிறுத்த வழிதெரியாமல் அவனுடன் சேர்ந்து கண்ணீர் வடித்து வருகின்றனர்.