ஐக்கிய நாடுகள் மனித உரிமைக்கூட்டத் தொடரில் கலந்து கொண்டுள்ள வைகோவின் பாதுகாப்பிற்காக 2 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ் அமைப்புக்களின் கோரிக்கையை ஏற்று வைகோவுக்கு பாதுகாப்பு தர ஐ.நா சார்பில் 2 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடரில், வைகோ நேற்று உரையாற்றும் போது இலங்கையிலிருந்து சென்ற சிலருடன்
முன்னாள் இராணுவத்தளபதி சரத் வீரசேகர தலைமையில் சென்ற குழுவினரே வைகோவுடன் தகராறு செய்துள்ளார்கள் இதன்போது 35 சிங்களவர்கள் வைகோவை சூழ்ந்து கொண்டிருந்தனர்.
இதையடுத்து, ஜெனிவா சென்றுள்ள தமிழ் அமைப்புக்களின் கோரிக்கையை ஏற்று வைகோவுக்கு ஐ.நாவில் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.