இது நடந்தா ஓவியா தான் பிக்பாஸ் டைட்டில் ஜெயிப்பாங்க: பிரியங்கா

நடிகை ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியின் 100 நாள் விழாவுக்கு நிச்சயம் வருவேன் என நேற்று அறிவித்ததால் அவரது ஆர்மி மகிழ்ச்சியில் உள்ளது.

DKjfhdXUIAEbRXe

ஒரு பிரபல கடையின் திறப்பு விழாவில் கலந்துகொண்ட அவர் இதை தெரிவித்தார். இதே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பிரியங்கா தற்போது ஒரு பேட்டியில் ஓவியாவின் திட்டம் பற்றி பேசியுள்ளார்.

“பைனலுக்குப் பிறகு ரசிகர்களிடம் மனம்விட்டு பேசப்போறேன்’னு சொன்னாங்க. அவங்களோட பிளான் தெரிஞ்சதுலேருந்து நான் செம குஷியா இருக்கேன். இந்த வாரத்துடன் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி முடியப்போகுது. நிகழ்ச்சியின் ஃபைனல் நாளில் ரிசல்ட் அறிவிக்க ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி ஓவியாவை போட்டியாளராக்கி, ஓட்டிங்கை ஸ்டார்ட் பண்ணினாலும் அவங்கதான் வின் பண்ணுவாங்கனு நான் உறுதியா நம்புறேன்,” என பிரியங்கா கூறியுள்ளார்.