மேஷம்: –
காலை மணி 10.39 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் டென்ஷன் இருக்கும். பிற்பகல் முதல் குடும்பத்தில் இருந்த சச்சரவு நீங்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். புண்ணிய ஸ்தலங் கள் சென்று வருவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.
ரிஷபம்:-
காலை மணி 10.39 முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் ஒருவித படபடப்பு வந்து செல்லும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டி யிருக்கும். சிலர் உங்களை மட்டம் தட்டிப் பேசினாலும் உணர்ச்சி வசப்படாதீர்கள். உங்களை நீங்களே குறைத்து மதிப் பிடாதீர்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் மறைமுக அவமானங்கள் வந்து நீங்கும். பொறுமைத் தேவைப்படும் நாள்.
மிதுனம்:-
உங்கள் பலம் பல வீனத்தை உணர்வீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். ஆடை, ஆபரணம் சேரும். மனைவி வழியில் மதிக் கப்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். தன்னம் பிக்கை துளிர்விடும் நாள்.
கடகம்:-
குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாத கமான தீர்ப்பு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் உங்களின் கடின உழைப்பால் அதிகாரியின் மனதில் இடம் பிடிப்பீர்கள். அமோகமான நாள்.
சிம்மம்:-
புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். நீண்ட நாள் பிரார்த் தனைகளை நிறைவேற்றுவீர்கள். புதிய வரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங் களை கற்றுக் கொள்வீர்கள். புதுமை படைக்கும் நாள்.
கன்னி:-
நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்களை முடிப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். பயணங் களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.
துலாம்:-
தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறு துணையாக இருப்பார்கள். பிரபலங்களின் நட்பு கிடைக் கும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபா ரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். நினைத்ததை முடிக்கும் நாள்.
விருச்சிகம்:-
காலை மணி 10.39 வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனஉளைச்சல் ஏற்படும். பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். உறவினர் களின் ஆதரவுக் கிட்டும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோ கத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மனநிம்மதி கிட்டும் நாள்.
தனுசு: –
காலை மணி 10.39 முதல் ராசிக்குள் சந்திரன் தொடங்குவதால் அவ்வப் போது கோபப்படுவீர்கள். உங்கள் குடும்பத்தினரை பற்றி வெளி நபர்களிடம் குறைக் கூறி பேச வேண்டாம். லேசாக தலை வலிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் பணிவாகப் பேசி வேலை வாங்குங்கள். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.
மகரம்:-
விடாப்பிடியாக செயல் பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகள் கோபப்படுவார்கள். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
கும்பம்:-
நீண்ட நாள் ஆசை நிறைவேறும். உடன்பிறந் தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார் கள். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமை யுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோ கத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். மதிப்புக் கூடும் நாள்.
மீனம்:-
கோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். சாத்வீகமான எண்ணங் கள் வரும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வி.ஐ.பிகள் உதவு வார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோ கத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். சாதிக்கும் நாள்.