இலங்கைக்கு கிடைத்து வந்த அந்நிய செலாவணி வருமானத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இதற்கான முக்கிய காரணம் வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்கள் அனுப்பும் பணம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வீழ்ச்சியைக் கண்டிருந்தது.
இதன் காரணமாக ஜூன் மாதம் வரையான இந்த ஆண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் அந்நிய செலாவணி வருமானம் 5.7 வீதத்தினால் வீழ்ச்சியடைந்திருந்தது.
அதேநேரம் ஜூலை மாதம் தொடக்கம் அந்நிய செலாவணி வருமானம் சற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாகவும் மத்திய வங்கியின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.