புவி வெப்பமயமாதலால் அண்டார்டிகாவில் பனிப்பாறையில் திடீர் பிளவு கடல்நீர்மட்டம் அதிகரிக்கும் அபாயம் – ஆராய்ச்சியாளர்கள் கண்காணிப்பு

அண்டார்டிகாவில் பைன் தீவில் உள்ள பனிப்பாறையில் நடுப்பகுதி திடீரென பிளவு ஏற்பட்டுள்ளதை செயற்கைகோள் புகைப்படம் மூலம் தெரியவந்துள்ளது.

Larsen-B-ice-shelf-Penisola-Antartica-620x330

உலகின் 5-வது மிகப்பெரிய கண்டம் அண்டார்டிகா. இது ஏறக்குறைய பனிக்கட்டியினால் மூடப்பட்டுள்ளது. புவி வெப்பமயமாதலால் இங்குள்ள பனிகட்டிகள் உருகி கடல் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

இந்தநிலையில் மேற்கு அண்டார்டிகாவில் உள்ள பைன் தீவு பனிப்பாறையில் ஏற்பட்ட பிளவால் 266 சதுர கிலோ மீட்டர் அளவுள்ள பனிப்பாறை ஒன்று பிரிந்துள்ளது செயற்கைக்கோள் மூலம் வெளியாகியுள்ள புகைப்படத்தில் வெளியாகி உள்ளது. இந்த பைன் தீவு பாறையானது அண்டார்டிகாவிலேயே மிகவும் வேகமாக உருகும் பனிப்பாறை ஆகும். இந்த பனித்தீவு முழுமையாக உருகிவிட்டால் உலகின் ஒட்டுமொத்த கடல்நீர்மட்டம் சுமார் 1.7 அடி அளவு அதிகரிக்கும். எனவே இந்த பனிப்பாறையை ஆராய்ச்சியாளர்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளாகவே புவி வெப்பமயமாதலால் அங்கிருக்கும் பனிக்காட்டிகள் உருகி வருகிறது. இதனால், கடல் நீரின் அளவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த 2௦15ம் ஆண்டு, சுமார் 225 சதுர அடி அளவு உள்ள பனிக்கட்டிகள், தனியே பிரிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.