இலங்கையில் இருந்து சட்ட ரீதியற்றவகையில் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் தமது நாட்டுக்கு தத்தெடுக்கப்பட்டார்களா? என்பது தொடர்பில் டென்மார்க் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது.
நெதர்லாந்தில் வெளியான தகவல் ஒன்றின்படி 11,000 இலங்கை சிறுவர்கள் 1980ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் ஐரோப்பியாவுக்கு தத்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் நெதர்லாந்துக்கு மாத்திரம் 4,000 பேர் தத்தெடுக்கப்பட்டனர் என்று தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் தமது நாட்டுக்கும் இவ்வாறு தத்தெடுக்கப்பட்ட சிறுவர்கள் அழைத்து வரப்பட்டனரா? என்பது குறித்து விசாரணை செய்யவுள்ளதாக டென்மார்க்கின் சர்வதேச தத்தெடுப்பு நிறுவனமான டி.ஐ.ஏ தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வெளியாகியுள்ள புகைப்படம் ஒன்று குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, தத்தெடுக்கப்பட்ட சிறுவர்களின் இலங்கை பெற்றோரும், அதேபோல தத்தெடுக்க டென்மார்க் பிரஜைகளும் தற்போது வயது வந்தவர்களாக உள்ளமையால் பல கேள்விகளுக்கு விடைகளை கண்டுபிடிக்க முடியாமல் போகும் என்று
அந்த நிறுவனம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.