வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். அவர்கள் அனைவரையும் உடனடியாக தூக்கில் போட வேண்டும் என வித்தியாவின் குடும்பத்தினர் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.
வித்தியாவின் படுகொலை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று யாழ்.மேல் நீதிமன்றில் வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில் தமது நிலைப்பாடு குறித்து வினவிய போது வித்தியாவின் குடும்பத்தினர் இதை தெரிவித்துள்ளனர்
எமது பிள்ளையை இழந்து நாம் தவிப்பது போல் இனி யாருக்கும் நடக்க கூடாது. யாருக்கும் இந்த நிலை வரக்கூடாது, இவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை ஒரு பாடமாக இருக்க வேண்டும்
இனி தவறு செய்ய நினைப்பவர்களுக்கு இந்த தண்டனை ஒரு படிப்பினையாக இருக்க வேண்டும்.
இந்த ஒன்பது பேரில் ஒருவரையும் விடுதலை செய்யக்கூடாது. அப்படி செய்தால் அவர்களால் எமது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்
எமது பிள்ளையை இழந்து, தங்கையை இழந்து நாம் தவிக்கின்றோம். தனியாக இருக்கின்றோம். வித்தியாவைப் பிரிந்து நரக வேதனை அனுபவிக்கின்றோம் என கவலை வெளியிடுள்ளார்கள்.