வித்தியா கொலை வழக்கில் 13 வயதுப் பாடசாலை மாணவன் சாட்சி

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் 13 வயதுப் பாடசாலை மாணவன் வழங்கிய சாட்சியத்தைத் தீர்ப்பாயம் உண்மை என ஏற்றுக் கொண்டுள்ளது.

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் தண்டனைத் தீர்ப்பு சற்று நேரத்தில் வழங்கப்படவுள்ளது. தீர்ப்பாயத்தின் தலைவர் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தற்போது தீர்ப்பை வாசிக்கின்றார்.
இந்த வழக்கில் இரண்டாம் எதிரியை வீதியில் கண்டதாக சிறுவன் வழங்கிய சாட்சியம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

குற்றபுலனாய்வு பிரிவு பிரதான விசாரணை அதிகாரிக்கு வழக்கின் சந்தேகநபர் லஞ்சம் கொடுக்க முற்பட்டமை தொடர்பாக சாட்சியமளித்த இப்லானின் சாட்சியத்தையும் தீர்ப்பாயம் ஏற்றுக் கொண்டுள்ளது.

அவர் குற்றம் நடத்த இடத்தைச் சேர்ந்தவர் அல்லர் என்ற ரீதியும், குற்றத்துடன் தொடர்பற்றவர் என்ற ரீதியிலும் தீர்ப்பாயம் சாட்சியத்தை ஏற்றுக் கொண்டுள்ளது.