எதிர்வரும் இரண்டு வாரங்கள் இலங்கையின் வான் பரப்பு கடுமையாக இருளடைந்திருக்கும் – பிரபல சோதிடர் எச்சரிக்கை

எதிர்வரும் இரண்டு வாரங்கள் வரை இலங்கை கடுமையான அபாய நிலையை எதிர்கொண்டுள்ளதாக பிரபல சோதிடர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக சிங்கள ஊடகம் ஒன்றுக்கு விரிவான நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ள அவர், இன்று தொடக்கம் எதிர்வரும் அக்டோபர் மாதம் 10ம் திகதி வரை இலங்கையின் வான் பரப்பு கடுமையாக இருளடைந்திருக்கும்.

கடற்கரையோரப் பிரதேசங்களை தாண்டி நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் கடும் மழை பொழிவதுடன், வௌ்ளம் மற்றும் மண் சரிவு அபாயம் அதிகரிக்கும்.

அதேநேரம் ஏனைய இயற்றை அனர்த்தங்களை விட மழை மற்றும் நீர் காரணமாக ஏற்படக் கூடிய இயற்கை அனர்த்தங்களே அதிகமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.