இந்தோனேசியாவின் பாலித் தீவில் உள்ள மிகப்பெரிய எரிமலை சீறத் தொடங்கியுள்ளதால் பாதுகாப்பு கருதி பொதுமக்கள் வெளியேறத் தொடங்கியுள்ளனர். குறித்த எரிமலையில் இருந்து தற்போது நீராவி மற்றும் கரும்புகை வெளிப்பட்டு வருவதால் பொதுமக்களிடையே அச்சம் எழுந்துள்ளது
பாலித் தீவில் உள்ள எரிமலை எந்த நேரத்திலும் வெடிக்கும் நிலையில் இருப்பதால் எரிமலை அருகே உள்ள பகுதிகளில் வசித்துவரும் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். எரிமலையை சுற்றியுள்ள 12 கிலோ மீற்றர் பகுதிகளுக்கு பொதுமக்கள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி எரிமலை சீற்றத்தால் விமான சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பாலித் தீவில் சுற்றுலாவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது
இந்தோனேசியாவில் 130-க்கும் மேற்பட்ட எரிமலைகள் இருக்கின்றன. அவற்றில் அகுங் எரிமலை அவ்வப்போது சீற்றத்துடன் காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது