தங்கொட்டுவ பிரதேசத்தில் ஜெர்மனியர் ஒருவருக்கும் இலங்கையர் ஒருவருக்கும் இடையில் கைகலப்பு சம்பவமொன்று பதிவாகியுள்ளது
தங்கொட்டுவ பொலிஸார் இந்த மோதல் சம்பவம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
நேற்றைய தினம் மாலை வேளையில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத்ஹால்தண்டுவன பிரதேசத்தில் வசித்து வரும் 60 வயதான ஜெர்மன் பிரஜையான ஒலிவர் கிளார்க் என்பவருக்கும், கம்பளை பிரதேச்தைச் சேர்ந்த 37 வயதான சஞ்சீவ சமந்த என்பவருக்கும் இடையில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஜெர்மனியர் இலங்கை பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டு தற்போது இலங்கையில் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.வாகன நெரிசல் தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாற்றமடைந்துள்ளது.
தம்மை தாக்கியதாகவும் மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும் இருவரும் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பர குற்றச்சாட்டுக்களை பொலிஸ் நிலையத்தில் முன்வைத்துள்ளனர்
இது தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன