நாடு முழுவதிலுள்ள சதொச விற்பனை நிலையங்களில் குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படவுள்ளது
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விசேட உத்தரவுக்கு அமைய இன்று முதல் இந்த நடைமுறை அமுலாகிறது.
அதற்கமைய அரிசி, பெரிய வெங்காயம், கிழங்கு ஆகிய பொருட்கள் இன்று முதல் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் போது, ஜனாதிபதியால் இந்த ஆலோசனை வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தையில் தேங்காய் விலை அதிகரித்துள்ளமை தொடர்பில் உடனடியாக கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேங்காய உற்பத்தி சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்
அதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இடைதரகர்கள் இன்றி நடமாடும் சேவை வாகனத்தை பயன்படுத்தி நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு தேங்காய் விற்பனை செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.