தெலுங்கு தொலைக்காட்சியில் BiggBoss நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை மிகவும் பிரம்மாண்டமாக முடிந்துள்ளது
ஜுனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது ரசிகர்கள் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்றும் அதனை யார் தொகுத்து வழங்க இருக்கிறார் என்றும் கேள்வி எழுப்ப ஆரம்பித்துவிட்டனர்.
நமக்கு கிடைத்த தகவல்படி, அடுத்த சீசனை ஜுனியர் என்.டி.ஆருக்கு ஓகே சொன்னால் அவரே நிகழ்ச்சி தொகுத்து வழங்குவார். அவருக்கு விருப்பம் இல்லை என்றால் தெலுங்கு சினிமாவின் இளம் நாயகன் நானி தொகுத்து வாங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது