நாட்டின் பல பகுதிகளில் நிலவி வரும் மழையுடன் கூடிய காலநிலையில் மாற்றம் ஏற்பட உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் நிலவி வரும் மழையுடனான காலநிலை இன்றுடன் குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் அதிகாரி ஜனக குமார தெரிவித்துள்ளார்
சப்ரகமுவ மாகாணம், கொழும்பு, களுத்துறை மாவட்டங்களின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழையும், மத்திய மலைநாடு, காலி, கம்பஹா மாவட்டங்களில் இடைக்கிடை மழை பெய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த மழையுடன் கூடிய காலநிலை இன்றுடன் குறைவடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்