ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொள்வதற்காக, இலங்கை அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை செயற்படுத்துமென நம்புவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொள்வதற்காக, இலங்கை அரசாங்கம் வாக்குறுதி அளித்த விடயங்களை செயற்படுத்துமென நம்புவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது

சில விடயங்களில் மெதுவான போக்கு காணப்படுவதையும் சுட்டிக்காட்டியுள்ள ஐரோப்பிய ஒன்றியம், அவற்றில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளது

Mar192012_2இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன மற்றும் தேசிய கொள்கைகள்  பொருளாதார விவகாரங்களுக்கான பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா ஆகியோருடன், ஐரோப்பிய ஒன்றிய தலைமையகத்தில் இடம்பெற்ற சந்திப்பில், அதன் ஆணையாளர் Christos Stylianides இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னர் முன்னெடுத்துவரும் செயற்பாடுகளையும் ஐரோப்பிய ஒன்றிய ஆணையர் வரவேற்றுள்ளார்.

இதேவேளை, ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்தமைக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் திலக் மாரப்பன, அரசியல் யாப்பு சீர்திருத்தம், மனித உரிமைகளை மேம்படுத்தல் உள்ளிட்ட விடயங்களில் இலங்கை அரசாங்கம் கூடுதல் அக்கறை செலுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்காக 40 மில்லியன் யூரோக்களை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது