வடகொரியாவின் தொடர் அணுஆயுத பரிசோதனைகள் காரணமாக கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவி வருகிறது
இதையடுத்து மலேசிய மக்களின் பாதுகாப்பு கருதி வடகொரியாவுக்கு செல்ல மலேசிய அரசு தடை விதித்துள்ளது
இதுகுறித்த அறிவிப்பை அந்நாட்டின் வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நிலைமை சீரானதும் தடை உத்தரவு விலக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
வடகொரியாவுடன் மலேசியா நல்லுறவு கொண்ட நாடாக இருந்து வந்த நிலையில், இந்த வருட தொடக்கத்தில் வடகொரியா அதிபர் கிம் ஜாங்-கின் சகோதரர் மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் கொலை செய்யப்பட்டார், அதிலிருந்து இரு நாடுகள் உறவில் விரிசல் விழத் தொடங்கியது
மலேசிய கால்பந்து அணி வடகொரியாவுக்கு சென்று வரும் அக்டோபர் 5ஆம் திகதி கால்பந்து போட்டியில் விளையாடவுள்ளது.
இந்த தடை உத்தரவு காரணமாக மலேசிய காலபந்து அணி வடகொரியாவுக்கு செல்ல தடை விதிக்கப்படுமா என்ற கேள்வியெழுந்துள்ளது.