பேய் படங்களில் நடிக்கும் ஓவியா…

டிகே இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் `யாமிருக்க பயமே’.

த்ரில்லர் கலந்த காமெடி படமாக வெளியான இந்த படத்தில் கிருஷ்ணா, ரூபா, ஓவியா, கருணாகரன் முக்கிய கதபாத்திரத்தில் நடித்திருந்தனர்

images
இந்நிலையில், 3 வருட இடைவேளைக்குப் பிறகு டிகே அடுத்ததாக இயக்கவிருக்கும் புதிய படத்திற்கு `காட்டேரி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நாயகனாக ஆதித்யா சாய்குமார் அறிமுகமாகிறார். நாயகியாக ஓவியா நடிக்கிறார்.

காமெடி கலந்த பேய் படமாக உருவாக இருக்கும் இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.வி.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது

ஏற்கனவே சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் – ஓவியா இணைந்து `இருட்டு அறையில் முறட்டு குத்து’ என்ற பேய் கதையில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், `காட்டேரி’ படத்திலும் ஒப்பந்தமாகி உள்ளதன் மூலம் அடுத்தடுத்து இரு பேய் படங்களில் ஓவியா நடிப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த படத்தையும் ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.வி.ஞானவேல் ராஜாவே தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.