அதிக பணம் பெற்று கொண்டு குறைந்த சதுர அடி இடத்தை வாடகைக்கு தரும் மோசமான நகரங்களின் பட்டியலில் பாரீஸும் இணைந்துள்ளது
ரெண்ட் கேப் என்னும் ஓன்லைன் வலைதள நிறுவனம் $1,500 வாடகைக்கு எவ்வளவு சதுர அடி கொண்ட அடுக்குமாடி வீடுகள் உலகின் முக்கிய நகரங்களில் தரப்படுகிறது என்ற ஆய்வை நடத்தியது.
இதில் பிரான்ஸின் பாரீஸ் நகரம் 25வது இடத்தில் உள்ளது. இங்கு $1,500 வாடகைக்கு 30m² இடம் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு தான் கிடைப்பதாக தெரியவந்துள்ளது
இந்த பட்டியலில் தாராளமான இடம் கிடைக்கும் நகரமாக துருக்கியின் இஸ்தான்புல் முதலிடத்தில் உள்ளது. இங்கு $1,500 வாடகைக்கு 176m² அளவிலான இடம் தரப்படுகிறது
அதாவது பாரீஸை விட ஐந்து மடங்கு அதிகமாகும், பட்டியலில் இரண்டாமிடத்தில் சீனாவின் ஷாங்காய் நகரம் உள்ளது.
மூன்றாமிடத்தில் ஜெர்மனியின் பெர்லின் 139m² அளவிலான இடத்துடன் உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது
இந்த விடயத்தில் பாரீஸை விட மோசமாக சான் பிரான்ஸிஸ்கோ, ஸ்விட்சர்லாந்தின் சூரிச், லண்டன் ஆகிய நகரங்கள் உள்ளன.