ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறப்படுவதால், அதைப் பற்றி விசாரணை நடத்துவது அவசியம். தமிழகம் சீரழிந்து கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் என் போன்றோர் களம் இறங்க வேண்டியது கட்டாயம். அதனால்தான் தமிழக அரசியலில் கூடிய விரைவில் களம் இறங்க உள்ளேன் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி சேவைக்கு நேற்று முன்தினம் வழங்கிய செவ்வியில் அவர் மேலும் தெரிவித்ததாவது, “மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக விமர்சிக்கப்படுகிறது.
ஒரு முதல்வராக அவரை பார்க்காமல் சாதாரண பெண்ணாக பார்த்தாலும் கூட அந்த பெண்மணியின் மரணத்தில் நிறைய ரகசியங்களும், குழப்பங்களும் இருப்பதாக கூறுகின்றனர். அவரது மரணம் சர்ச்சைக்குரியதுதான்.
எனவே ஜெயலலிதா மரணம் குறித்து பொலிஸார் புலன் விசாரணை செய்ய வேண்டியது அவசியம்.
ஜெயலலிதா மரணம் தொடர்பில் பொய் சொல்வதே தவறு. இது பொய் என்பதை தவிர பல இரகசியங்கள் புதைக்கப்பட்டுள்ளன. அவற்றை தோண்டியெடுக்க வேண்டும்.
அரசு சீரழிந்துள்ள நிலையில் அவ்விடத்துக்கு யார் வந்தாலும் அது முட்கிரீடமே. இது மிக மோசமான சந்தர்ப்பம். இந்த நிலையில் நாம் களம் இறங்க வேண்டும் என்பது கட்டாயம். என்னால் முடிந்த அளவு செயற்பட்டு கொண்டிருக்கின்றேன். நான் மக்களின் கருவியாக எப்போது வேண்டுமானாலும் களம் இறங்கலாம்.
மாற்றம் தேவை என்பது மக்களுக்கு தேவைப்படுகின்றது. மக்கள் எதை விரும்புகின்றனர் என்பது முக்கியம். மக்கள் சந்தோஷமாக வாழ வேண்டியதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தமிழகம் சீரழிந்து இருக்கின்ற நிலையில் அதனை சரி செய்ய வேண்டும்.
நல்லாட்சி இங்கு நடக்கவில்லை. வெற்றிடம் என்பது ஒருவர் இல்லை என்பதல்ல. இங்கு கேள்வி கேட்கும் மக்கள் இல்லை என்பதே. எனவே மக்கள் கேள்வி கேட்க வேண்டும்.
தலைமை என்பது கொடுத்தால் ஏற்பேன். நான் நம்பி இருப்பது இளைஞர் கூட்டம். என்னை பின்னால் இருந்து யாரும் இயக்கவில்லை. டில்லியில் இருந்து யாராவது இயக்குகின்றனர் என நினைத்தால் தவறு. நான் இயங்குவது என் மூளை சொல்வது போல. தமிழகத்தில் நல்லாட்சி இல்லை. இங்குள்ள பிரச்சினைகளை நாம் தீர்க்க வேண்டும்.
டுவிட்டரில் இவ்வளவு தைரியமாக பேச காரணமே மக்களுக்கு சேவை செய்ய அரசியலுக்குள் வருவதற்காகவே.
ரஜினி பாதை வேறு எனது பாதை வேறு.படங்கள் கூட அவரை விட வித்தியாசமாக செய்ய வேண்டும் என நினைத்தேன் முயற்சித்தேன். மக்கள் சேவைக்கு தேவை என்றால் ரஜினியுடன் சேரலாம். ரஜினியை நான் சினிமாவில் கூட போட்டியாக பார்த்ததில்லை. ரஜினி ரசிகர் மன்றத்துக்கு ரஜினி தலைவர் இல்லை. ஆனால் எனது நற்பணி மன்றத்துக்கு நான் தலைவர்.
விஜய் அரசியலுக்கு வருவது என்பது அவரது விருப்பம். ஒத்த கருத்து இருந்தால் தோள் கொடுப்போம். நாம் செய்யும் நற்பணிகளுக்கு இடையூறு செய்தால் விமர்சிக்கவும் தவற மாட்டோம். என்னை பொருத்தவரையில் விஜய் “முள்ளும் மலரும்” போன்ற நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்பதே எனது ஆசை.. தம்பி விஜய்யும் நல்ல படம் பண்ணணும். ஊடகத்தில் சொன்னால் அவர் செய்வார் என்று நினைக்கின்றேன்.
வெற்றி பெற்ற பெரிய நடிகர்கள் ஒரு நல்ல படத்தில் நடிக்க வேண்டும். ஹிந்தி நடிகர் அமீர்கான் அப்படி நடித்துக்கொண்டு இருக்கிறார். அவரைப் போலவே தம்பி விஜய்யும்