தளபதி விஜய் நடிப்பில் இந்த தீபாவளிக்கு மெர்சல் படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் மீது ஏற்கனவே மிகுந்த எதிர்ப்பார்ப்பு உள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் ரிலிஸை அறிந்து தமிழில் பல படங்கள் பின்வாங்கிவிட்டது, விஜய்க்கு தமிழகத்தை தாண்டி கேரளாவிலும் நல்ல மார்க்கெட் உள்ளது
இதனால், கேரளாவில் நல்ல வசூல் வரும் என எதிர்ப்பார்த்த நிலையில் மோகன் லாலின் வில்லன் படமும் அதே நாளில் வருவதாக இருந்தது
தற்போது கிடைத்த தகவலின்படி வில்லன் ரிலிஸ் தேதி தள்ளி சென்றதாக கூறப்படுகின்றது, இதனால், மெர்சல் முதல் நாள் கேரளாவில் ரூ 4.5 கோடி வரை வசூல் செய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.