பிரித்தானிய மகாராணி எலிசபத்தை அவரது கணவர் பிலிப் அழைப்பது எப்படி தெரியுமா ?

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தை அவர் கணவர் பிலிப் செல்லமாக என்ன பெயர் சொல்லி அழைப்பார் என தெரியவந்துள்ளது.

பிரித்தானிய மகாராணி எலிசபெத்துக்கும், அவர் கணவர் பிலிப்புக்கும் திருமணமாகி 70 வருடங்கள் ஆகிறது

pa-32013670

அன்பான தம்பதிகளாக இருவரும் வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் எலிசபெத் மகாராணியை பிலிப் செல்லமாக கேபேஜ் (முட்டைகோஸ்) என அழைப்பார் என தெரியவந்துள்ளது

எலிசபெத் ராணி வாழ்க்கை வரலாறு குறித்து வந்த திரைப்படத்தில் பிலிப் “முட்டைகோஸ்” என மகாராணியை அன்பாக அழைப்பார்

இதுகுறித்து அப்படத்தின் திரைக்கதை ஆசிரியர் பீட்டர் மோர்கன் கூறுகையில், அரச குடும்பத்தின் நெருங்கிய வட்டாரத்தில் இதுகுறித்து நான் விசாரித்தேன்.

அப்போது தான் மகாராணியை பிலிப் செல்லமாக அழைப்பதாக தெரியவந்ததாக கூறியுள்ளார்.</p><p>பிரெஞ்ச் மொழியில் “என் அன்பே” என கூறுவதை தான் பிலிப் அவ்வாறு செல்லமாக மாற்றி கூறுகிறார் எனவும் சிலர் சொல்கிறார்கள்

எலிசபெத் மகாராணியை அவர் குடும்பத்தில் உள்ள மற்ற நபர்கள் “லில்லி பெட்” என செல்லமாக அழைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.