நிகழ்காலத்தில் வாழ்ந்த ஓர் மிகப்பெரிய வீரத்தமிழன் பிரபாகரன் – கிளிநொச்சியில் இயக்குனர் பாரதிராஜா தெரிவிப்பு ..

bharathiraja-talks-about-karnattaka-issueநிகழ்காலத்தில் வாழ்ந்த ஓர் மிகப்பெரிய வீரத்தமிழன் யாழ். மண்ணில் பிறந்தான். அவன் தமிழர்களுக்கு ஓர் அடையாளத்தினை சொல்லிவிட்டுச் சென்றான் என இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
மேலும், இது ஓர் தனி ஈழமான பிறந்திருக்க வேண்டியதற்காக போராடிய ஓர் வரலாற்றுச் சிறப்பு மிக்க மிகப்பெரிய தலைவனோடு சில நாட்கள் நான் இந்த மண்ணில் தங்கியிருந்தேன்.
அந்த உணர்வு பூர்வமான விடயமே இன்றைக்கும் நான் ஈழத்தமிழர்களோடு பிணைந்திருப்பதற்கான முக்கிய காரணம். இதனை பற்றி வரலாறுகள் தெளிவாக பேசும்.
இப்போது நான் அதனை கூறினால் பிழையான கருத்தாக மாறிவிடும் காரணம் இன்றைய சூழ்நிலைகள் மாறிப்போய்விட்டன எனவும் பாரதிராஜா மேலும் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சில் தென்னிந்திய திரைப்பட இயக்குனர் பாரதிராஜா
கணினி கற்கைநெறி பூர்த்தி செய்த மாணவர்களிற்கு சான்றிதள் வழங்கும் நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று 2 மணியளவில் வடமாகாணசபை உறுப்பினர் த.குருகுலராஜா தலைமையில் நடைபெற்றுள்ளது.

லண்டன் கற்பக விநாயகர் ஆலய அறக்கட்டளையின் நிதி அனுசரணையில் கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் இலவச கணினி கற்கைநெறி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியதுடன், தென்னிந்திய திரைப்பட இயக்குன் பாரதிராஜா சிறப்பு விருந்தினராகவும், நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராஜாவும் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதை தொடர்ந்து பயிற்சியை முடித்த 130 மாணவர்களிற்கு சான்றிதழ்கள் இயக்குனர் இமயத்தால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இயக்குனர் இமயம், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராஜா ஆகியோர் உரையாற்றினர். நிகழ்வில் மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.