மாணவி வித்தியாவின் படுகொலையில் இரண்டரை வருடங்களில் நடந்தது என்ன?

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளையும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை சம்பவத்தை யாரும் மறந்து விட முடியாது.
குறித்த மாணவியின் படுகொலை சம்பவத்தின் வழக்கு விசாரணைகள் நிறைவடைந்துள்ள நிலையில் அனைவரும் எதிர்பார்த்திருந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டது

வித்தியா படுகொலை- இரண்டரை வருடங்களில் நடந்தது என்ன? விபரம் உள்ளே!

pungudutivu-viththiya-photos-suspects

புங்குடுதீவு 9 ஆம் வட்டாரத்தில் வசித்து வந்த பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்தியா, கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி பாடசாலை செல்லும் வழியில் காடையர்களால் கடத்தப்பட்டு, பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்ட பின்னர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டிருந்தார். 2015.05.14 ஆம் திகதி அன்று அவருடைய சடலம் சின்ன ஆலடியில் உள்ள அலரி செடிகள் நிறைந்த பற்றைப்பகுதியில் மீட்கப்பட்டது.

இந்த சம்பவம் குடா நாடு மட்டுமல்ல நாடு முழுவதும் பாரிய எதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்ததுடன், குற்றவாழிகள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும் என்ற ஆக்ரோசம் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்தது. குறித்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் அன்யை தினமே ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்களான பூபாலசிங்கம் இந்திரகுமார், பூபாலசிங்கம் ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார் ஆகிய மூவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

தொடர்சியான தேடுதலின் அடிப்படையில் மகாலிங்கம் சசிதரன், தில்லைநாதன் சந்திரகாசன், சிவதேவன் துசாந்தன், பழனி ரூபசிங்கம் குகநாதன், ஜெயதரன் கோகிலன் ஆகிய ஐந்து பேரும் 2015.05.17 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர் இந்த நிலையில் இச் சம்பவத்துடன் தொடர்புள்ளதாக புங்குடுதீவு பொதுமக்களால் கட்டிவைத்து தாக்கப்பட்ட மகாலிங்கம் சசிகுமார்(சுவிஸ்குமார்) பொலிஸாரிடம் சரணடைந்து பின்னர் விடுவிக்கப்பட்ட நிலையில், 2015.05.19 ஆம் திகதி கொழும்பில் வைத்து மீண்டும் கைது செய்யப்பட்டார்.
இப் படுகொலையுடன் சம்பந்தப்பட்டவர் தப்பிவிட்டார் என்ற செய்தி பரவலாக வெளிவந்ததையடுத்து பொதுமக்கள் ஆக்ரோசமடைந்து போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களாக மாறியது

இதன் காரணமாக யாழ் நீதிமன்ற கட்டடம் ஆர்ப்பாட்ட காரர்களால் தாக்கப்பட்டது

அதன் காரணமாகவும் பலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். குடா நாடு முழுவதும் போராட்ட களமாக காட்சியளித்தது.

இதன் காரணமாக குறித்த வழக்கு நடவடிக்கை விரைவாக இடம்பெற வேண்டும் என்பதை தொடர்ந்து 2015.05.21 ஆம் திகதி குறித்த சம்பவத்தின் விசாரணை நடவடிக்கைகளை குற்றப்புலனாய்வு பிரிவினர் பொறுப்பெடுத்திருந்தனர்

கைது செய்யப்பட்ட சந்தேக நபார்கள் 9 பேரும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டனர்.

மேலதிக விசாரணைகளின் அடிப்படையில் 2015.12.15 ஆம் திகதி ஜெயவர்த்தன ராஜ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார்

மேலும் குறித்த குற்றச்செயலுடன் நேரடி தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், 2016.03.03 அன்று உதயசூரியன் சுரேஸ்கரன் கைது செய்யப்பட்டார்.
2016.04.01 இன்று மேலும் ஒரு சந்தேக நபரான தர்மலிங்கம் ரவீநிதிரன் கைது செய்யப்பட்டார்.

சம்பவம் தொடர்பாக 12 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர், சந்தேகநபரான உதயசூரியன் சுரேஸ்கரன் அரச தரப்பு சாட்சியாக மாற்றப்பட்டார்

ஒரு வருடங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜெயவர்த்தன ராஜ்குமார் மற்றும் தர்மலிங்கம் ரவீநிதிரன் ஆகியோர் வழக்கில் இருந்து முற்றாக விடுவிக்கப்பட்டனர்

ஏனைய 9 பேர் பேரும் எதிரிகளாக இனங்காணப்பட்டனர்

அந்த வகையில் முதலாம் எதிரியான பூ.இந்திரகுமார், 2 ஆம் எதிரியான பூ.ஜெயக்குமார், 3 ஆம் எதிரியான பூ.தவக்குமார், 4 ஆம் எதிரியான ம.சசிதரன், 5 ஆம் எதிரியான நி.சந்திரகாசன், 6 ஆம் எதிரியான சி.துசாந்தன், 7 ஆம் எதிரியான ப.குகநாதன், 8 ஆம் எதிரியான ஜெ.கோகிலன், 9 ஆம் எதிரியான ம.சசிகுமார் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தால் குற்றச்சாட்டு பத்திரம் யாழ் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்கை நீதாய விளக்க நீதிமன்றில் (ட்ரயலட்பார்) விசாரணை செய்ய சட்டமா அதிபர் திணைக்களம் பரிந்துரை செய்ததையடுத்து, பிரதம நீதியரசரால் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்
மூன்று நீதிபதிகள் முன்னிலையில் நீதாய விளக்க மன்று யூன் மாதம் 12 ஆம் திகதி முதன்முறையாக யாழ் மேல் நீதிமன்றில் கூடியது

சிவலோகநாதன் வித்தியா என்ற மாணவியை பாலியல் வன்புணர்வு நோக்கத்துக்காக கடத்துவதற்கு சதித்திட்டம் தீட்டடியமை , வண்புனர்வுக்காக கடத்தியமை, கூட்டாக சேர்ந்து வன்புணர்ந்தமை, கூட்டாக சேர்ந்து வன்புணர்ந்து செய்து கொலை செய்தமை போன்ற பிரதான குற்றங்களும் மேற்குறித்த குற்றங்களுக்கு உடந்தையாக இருந்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்ட 41 குற்றச்சாட்டுக்கள் எதிரிகளுக்கு எதிராக சுமத்தப்பட்டது
இதில் 9 ஆம், 4 ஆம் எதிரிகளுக்கு எதிராக பிராதான குற்றச்சாட்டாக, வித்தியாவை வன்புணரும் நோக்கத்துக்காக கடத்துவதற்கு சதித்திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது
ஆம், 3 ஆம், 5 ஆம் 6 ஆம் எதிரிகளுக்கு எதிராக மேற்குறித்த நான்கு பிரதான குற்றச்சாட்டுக்களும் சாட்டப்பட்டிருந்தன
7 ஆம், 8 ஆம் எதிரிகளுக்கு எதிராக மேற்குறித்த குற்றச்சாட்டுக்களுக்கு உடந்தையா இருந்துள்ளதாக பிரதான குற்றச்சாட்டுக்களாக முன்வைக்கப்பட்டது.
மேற்குறித்த குற்றச்சாட்டுக்களுக்கு தாம் சுற்றவாளிகள் என 9 எதிரிகளும் மன்றுரை செய்திருந்தனர்
அதனையடுத்து கடந்த யூன் மாதம் 28 ஆம் திகதியில் இருந்து நீதாய விளக்க நீதிபதிகள் மூவர் முன்னிலையில் விளக்கம் ஆரம்பிக்கப்பட்டது
சட்டமா அதிபர் சார்பில் குறித்த வழக்கை அரச சட்டவாதிகளான நாகரட்ணம் நிஸாந், மாதுரி விக்னேஸ்வரன் ஆகியோருடன் பிரதி மன்றாதிபதி கே.குமாரரட்ணம் வழக்கை நெறிப்படுத்தியிருந்தார்
1,2,3,6 ஆம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணிகளான மகிந்த ஜெயவர்தன 5 ஆம் எதிரி சார்பில் சட்டத்தரணி ரகுபதி ஆயராகியிருந்தார்.

4,7,9 ஆம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி சி.கேதீஸ்வரன் ஆஜராகியிருந்தார், 1 தொடக்கம் 9 வரையான எதிரிகளுக்கு மன்றால் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி வி.ஜெயந்தன் ஆஜராகியிருந்தார்கள்.

வழக்கு தொடுநர் தரப்பு எதிரிகள் தரப்பு சாட்சியங்கள் என அனைத்து சாட்சியங்களின் விசாரணைகள் முடிவுறும் வரை ஒவ்வொரு முறையும் மன்றில் எதிரிகள் 9 பேரும் ஆயர்படுத்தப்பட்டனர்

அனைத்து விசாரணைகளும் கடந்த செப்ரம்பர் மாதம் 13 ஆம் திகதி முடிவுற்றிருந்தது
இந்த நிலையில் அனைவரும் எதிர்பார்த்திருக்கும் நிலையில் 27-09-2017 குறித்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது
யாழ்.மேல் நீதிமன்றில் ட்ரயல் அட்பார் தீர்ப்பாயத்தில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் இந்த தீர்ப்பை அறிவித்துள்ளனர்

இதன்போது வவுனியா மேல் நீதிமன்றத்தின் நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் 332 பக்கங்களை கொண்ட தீர்ப்பை வாசித்துக்காட்டினார்.
தொடர்ந்து நீதிபதி இளஞ்செழியன் தனது 345 பக்க தீர்ப்பை வாசித்தார். இறுதியாக குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது
இதில் 2ஆம் எதிரியான பூபாலசிங்கம் ஜெயக்குமார், 3ஆம் எதிரியான பூபாலசிங்கம் தவக்குமார், 4ஆம் எதிரியான மகாலிங்கம் சசிதரன், 5ஆம் எதிரியான தில்லைநாதன் சந்திரகாசன், 6ஆம் எதிரியான சிவதேவன் துஷாந்தன், 8ஆம் எதிரியான ஜெயதரன் கோகிலன், 9ஆம் எதிரியான மகாலிங்கம் சசிக்குமார் என்போருக்கே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது

மரண தண்டனையோடு, 30 ஆண்டுகளுக்குச் சிறைத் தண்டனையும், 40,000 ரூபாய் தண்டப் பணமும், வித்தியாவின் குடும்பத்துக்கு 1 மில்லியன் ரூபாய் நட்டஈடும் வழங்கப்பட வேண்டுமென, அமர்வு உத்தரவிட்டது

அதேவேளை முதலாம், ஏழாம் எதிரிகள் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியவில்லை என சட்டமா அதிபர் திணைக்களம் கூறியிருந்தது.

கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13 ஆம் திகதி வித்தியா படுகொலைச் சம்பவம் இடம்பெற்றிருந்தது

இந்த வழக்கு விசாரணையில் பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், கொழும்பு பல்கலைக்கழ விரிவுரையாளர் விரி.தமிழ்மாறன் ஆகியோர் மீதும் விசாரணைகள் இடம்பெற்றிருந்தன. இன்று வழக்கப்பட்ட தீர்ப்பின்போது பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மீது நீதிபதி இளஞ்செழியன் விமர்சனங்களை முன்வைத்தார். கைதிகள் தப்பித்துச் செல்வதற்கு அரசியல் செல்வாக்கை பயன்படுத்துவது தவறு என்ற அடிப்படையில் நீதிபதியின் கருத்து அமைந்திருந்தது.
அதேவேளை ஒன்பதாம் எதிரியான சுவிஸ் குமார் கொழும்புக்கு தப்பிச் செல்ல உதவினார்கள் என்ற குற்றச்சாட்டில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க, உப பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீகஜன் ஆகியோர் மீதான வழக்கு விசாரணை வேறொரு பகுதியாக தொடர்ந்து நடைபெறவுள்ளது. பொலிஸ் உப பரிசோதகர் ஸ்ரீகஜன் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது இதேவேளை இந்த தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யவுள்ளதாக எதிரிகள் தரப்பு சட்டத்தரணி தெரிவித்திருந்தார்.