யாழ்ப்பாணம் கோண்டாவில் கே.கே.எஸ் வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்து

யாழ்ப்பாணம் கோண்டாவில் கே.கே.எஸ் வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

இன்று காலை கே.கே.எஸ் வீதி கோண்டாவில் உப்புமடம் சந்திக்கு அருகாமையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது

g

இரு மோட்டார் சைக்கிள்கள் சந்தியில் திரும்ப முற்பட்ட வேளையில் ஏற்பட்ட விபத்தில் ஆண் பயணித்த மோட்டார் சைக்கிள் கால்வாய்க்குள் பாய்ந்தது

குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆண் நூலிழையில் உயிர்பிழைத்தார்

காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் குறித்த வீதியில் சில மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்ததமை குறிப்பிடத்தக்கது.