பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுவருவதாக நல்லாட்சி அரசாங்கம் மார்தட்டிக்கொள்கின்ற போதிலும், கிராமப்புற வறிய மக்கள் தொடர்ந்தும் இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர்
இவ்வாறான நிலையில், அடிப்படைத் தேவைகளில் ஒன்றான வீட்டு வசதியை ஏற்படுத்தித் தருவதில் அரச அதிகாரிகள் அசமந்தம் காட்டுவதாக பாதிக்கப்பட்டுள்ள புளியங்குளம் – முத்துமாரி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்
நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு 7 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அவர்களுக்கான அடிப்படைத் தேவைகள் இதுவரை முழுமையாக ஏற்படுத்திக்கொடுக்கப்படவில்லை.
இவ்வாறான நிலையில் வசிப்பதற்கு நிரந்தர வீடு கூட இல்லாத நிலையில், தற்காலிகமாக அமைக்கப்பட்ட வீட்டில் தங்கியுள்ள மக்கள் பெரிதும் அல்லலுறுகின்றனர்.
வவுனியா மாவட்டத்தின் புளியங்குளம் – முத்துமாரிநகர் கிராமத்தில் வசிக்கும் சஞ்சீவன் குடும்பத்தினர் நிரந்தர வீடின்றி பெரிதும் நெருக்கடிகளுக்கு ஆளாகியுள்ளனர்
அடையாள அட்டை இல்லாத காரணத்தால் தமக்கு வீட்டுத்திட்டம் நிராகரிக்கப்பட்டதாகவும் எனினும் அப்பிரச்சனையை நிவர்த்தி செய்த பின்னர் மீண்டும் வீட்டுத்திட்டம் குறித்து வினவியபோது, அது தொடர்பில் அதிகாரிகள் அலட்சியமாக செயற்படுவதாகவும் சஞ்சீவனின் மனைவி யோகேஸ்வரி விசனம் வெளியிட்டுள்ளார்.