இலங்கையில் புகையிலை சார்ந்த பொருட்களின் பாவனையை கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்களுக்கு பிரித்தானியா நிதி உதவி வழங்கவுள்ளது.
இதன்படி, 2016ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரையில் முன்னெடுக்கப்பட்டுள்ள குறித்த திட்டத்திற்கு 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை பிரித்தானியா வழங்கவுள்ளது
நடுத்தரம் மற்றும் குறைந்த வர்க்க நாடுகளில், புகையிலை சார்ந்த பொருட்களின் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள 15 நாடுகளில் இலங்கையும் உள்ளடங்கியுள்ளது
இந்நிலையிலேயே, ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாக இந்த நிதி இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.