உலகின் எந்தவொரு நாட்டிற்கும் ஒரு மணி நேரத்தில் பயணிக்கும் வகையில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ரொக்கெட் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளதாக SpaceX’s நிறுவனம் அறிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் இடம்பெற்ற சர்வதேச விண்வெளி மாநாட்டில் உரையாற்றிய அந்த நிறுவனத்தின் தலைவர் Elon Musk இதனை குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ரொக்கெட் மணிக்கு 27 ஆயிரம் கிலோமீற்றரில் பறக்கும் எனவும், இதன்மூலம் லண்டனில் இருந்து டுபாய்க்கு 27 நிமிடங்களில் பயணம் செய்ய முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், உலக நாடுகளுக்கு இடையிலான போக்குவரத்தை வெறும் ஒரு மணிநேரத்தினுள் கொண்டுவர முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, எதிர்வரும் 2024ஆம் ஆண்டு பூமியில் இருந்து செவ்வாய் கிரகத்துக்கு மக்கள் பயணிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக Elon Musk கூறியுள்ளார்.
அந்த வகையில், இதற்குத் தேவையான விண்ணோடங்களைத் தயாரிக்கும் பணிகளைத் தனது நிறுவனம் அடுத்த ஆண்டு முதல் ஆரம்பிக்கவுள்ளதாக கூறியுள்ள அவர், இதற்கான காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.