இரண்டரை வருடங்களின் பின் மீண்டும் வடக்கில் தடம் பதித்த மஹிந்த அணி!

நீண்டகாலத்தின் பின்னர் வடக்கில் தடம் பதித்த மஹிந்த அணி!
முறிகண்டியில் கோலாகல வரவேற்பு!
22045725_1533301273392751_9020892783737977835_n
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ நேற்று கிளிநொச்சி முல்லைத்தீவு மக்களை சந்தித்துள்ளார்.நேற்று மாலை முறிகண்டி பிள்ளையார் ஆலயத்தில் முல்லைத்தீவு மாவட்ட ‘லங்கா பெரமுன கட்சி’ ஆதரவாளர்களால் வரவேற்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து முறிகண்டி பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற விஷேட வழிப்பாட்டில் கலந்து கொண்ட பின்னர் அப்பகுதி மக்களை சந்தித்து பேசினார்.
2015 ஆம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலை தொடர்ந்து, வடக்கில் தலை காட்டாதிருந்த மஹிந்த அணி தற்போது கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களின் பின் மீண்டும் வடக்கில் கால் பதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.