கோர விபத்து! 18 முன்பள்ளிச் சிறார்கள் படுகாயம்!!

புத்தளத்தில் கோர விபத்து!

18 முன்பள்ளிச் சிறார்கள் படுகாயம்!!

புத்தளம்-கொழும்பு பிரதான வீதியின் முந்தல் பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 1.00 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 18 பேர் காயமடைந்து சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

1397361437accident_bus_004

கொழும்பில் இருந்து இராஜங்கனை நோக்கி முன்பள்ளி சிறுவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேரூந்து முந்தல் 100 ஆவது மைல் கல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லொறியுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் தனியார் பஸ்ஸில் பயணித்த முன்பள்ளி சிறுவர்கள் உட்பட 18 பேர் காயமடைந்துள்ளனர்.

இராஜங்கனைப் பகுதியில் இருந்து நேற்று கொழும்புக்கு சுற்றுலா சென்று விட்டு வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பஸ்ஸே விபத்திற்குள்ளாகியுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.