மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 5ஆவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி ஒன்பது விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.
நேற்று இடம்பெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து, 288 ஓட்டங்களைப் பெற்றது.
இதையடுத்து, 289 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 38 ஓவர்களில் ஒரு விக்கட்டை மாத்திரமே இழந்து 294 ஓட்டங்களைப் பெற்று வெற்றியடைந்தது.
துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணி சார்பில் ஜொனி பெய்ர்ஸ்டோவ் (Jonny Bairstow) ஆட்டமிழக்காமல் 141 ஓட்டங்களையும், ஜோ ரூட் (Joe Root) ஆட்டமிழக்காமல் 46 ஓட்டங்களையும், ஜேசன் ரோய் (Jason Roy) 96 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இங்கிலாந்து அணி ஒரு விக்கட்டை மாத்திரம் இழந்து இந்த போட்டியில் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.