அமெரிக்காவுக்கு சென்றுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நாடு திரும்பியதும் புதிய அரசியலமைப்பினை எதிர்த்து முன்னெடுக்கப்படவுள்ள பிரசார நடவடிக்கைகள் குறித்த அடுத்த கட்டச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
உருவாக்கப்பட்டு வரும் புதிய அரசியலமைப்பினால் ஆபத்து ஏற்படவுள்ளதாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில் ‘எளிய’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு தனது முதலாவது கூட்டம் பொரலஸ்கமுவவில் நடைபெற்றிருந்தது.
இந்நிலையில் இரண்டாவது கூட்டம் கண்டியில் நடைபெறும் என கூறப்பட்டுள்ள நிலையில் அது குறித்த திட்டமில்களை கோத்தபாய ராஜபக்ஷ நாடு திரும்பியதுமே மேற்கொள்ள உள்ளதாக தெரியவருகின்றது.
இதன்போது இடைக்கால அறிக்கையில் முன்மொழியப்பட்டுள்ள பௌத்த மதம், நாட்டின் தன்மை, அதிகாரப்பகிர்வு ஆகிய தொடர்பான விடயங்கள் குறித்தும் கூட்டமைப்பினால் முன்மொழியப்பட்டுள்ள பின்னிணைப்பு குறித்தும் அதிகளவில் கவனம் செலுத்துப்படவுள்ளதாக அறிய முடிகின்றது.