வாழ்க்கைத் தத்துவம்.. .

*இது ஒரு எளிமையான கதை* ,,,
வாழ்க்கை

Couple holding hands

புதுமணத் தம்பதிகள் அவர்கள்.

கடுமையான கருத்து வேறுபாடு.
விவாகரத்தில் போய் நிற்கிறது.

யார் யாரோ சமாதானம் செய்தும் அவர்கள் இருவரும் சமரசம் ஆகவில்லை.

ஒரு நாள் ஓர் உறவுக்கார பெரியவர் அவர்கள் வீட்டுக்கு வருகிறார். சமாதானம் செய்ய,,,,
இவர்கள் அலட்சியமாக வரவேற்று பேசுகின்றனர்.
பிரச்னை தீரவில்லை.

இறுதியாக பெரியவர் ஒரு கருத்தை முன் வைக்கிறார்.

நான் சொல்வதை நீங்கள் செய்து விட்டால், நீங்கள் உங்கள் விருப்பப்படி பிரியலாம் எனச் சொல்ல, அவர்கள் ஒப்புக் கொள்கின்றனர்.

இப்போது பெரியவர், ஒரு பூ கட்டும் மெல்லிய நூலை காண்பித்து இதனை நீங்கள் பிய்க்க வேண்டும்(இழுத்து அறுக்க வேண்டும்)
என்கிறார்.

தம்பதியர் முகத்தில் அலட்சிய புன்னகை.
ப்பூ… இவ்வுளவு தானா?என்பது போல…
பெரியவர் அந்த நூலின் ஒரு முனையை தம்பதியரின் கையிலும்,
மறு முனையை தன் கையிலும் வைத்துக் கொண்டு,
அறுக்கச் சொன்னார்.

தம்பதியர் நூலை இழுக்க,…..
பெரியவர் அவர்கள் இழுத்த, இழுப்புக்கெல்லாம்
கூடவே செல்கிறார்.

நூல் இறுகவே அவர் விடாமல் தளர்வாகவே,
பிடித்தபடி உடன் செல்ல,
கடைசி வரை அவர்களால் அந்த மெல்லிய நூலை அறுக்கவே முடியவில்லை.
பெரியவர் சொன்னார்…

இந்த மெல்லிய நூல் தான் வாழ்க்கை…
விட்டுக் கொடுத்தால் வாழ்க்கை பந்தம் என்றென்றும் அறுபடாது.

இழுத்துப் பிடித்தால், பட்டென தெறித்து பயனில்லாமல் போய்விடும் என்றார்.

படாரென அவர் காலில் விழுந்த தம்பதியர், வாழ்க்கைத் தத்துவத்தை புரிந்து கொண்டோம் எனக் கூறி வணங்கினர்.

வாழ்க வளமுடன்
வாழ்க நலமுடன்
நல்லதே நடக்கட்டும்,,,,