லண்டனில் 107 மில்லியன் பவுண்ட் மோசடி! தமிழரின் சொத்துக்கள் பறிமுதல்

பண தூய்மையாக்கலில் ஈடுபட்ட கும்பலின் தலைவரான தமிழர் ஒருவரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

333

லண்டன் பண பரிவர்த்தனை மூலம் 107 மில்லியன் பவுண்ட்களை பண தூய்மையாக்கல் செய்த கும்பலின் தலைவரின் சொத்துக்களே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

HM வருவாய் மற்றும் சுங்க வரி (HMRC) விசாரணை பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய 45 வயதுடைய ராமநாதன் தயாபரன் என்பவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த 2014 ஆண்டு மே மாதம் ராமநாதன் தாயாபரன் என்பவருக்கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன் தினம் அவரது சொத்துக்களை பறிப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த கும்பல் ஒரு தொகை மோசடி பணத்தை லண்டன் பண பரிவர்த்தனை ஊடாக இலகுவாக 500 பவுண்ட் நாணயங்களுக்கு மாற்றியுள்ளதாக HMRC விசாரணை பிரிவு கண்டுபிடித்துள்ளது.

இந்த மோசடி கும்பலின் தலைமை அதிகாரியாக தயாபரன் செயற்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

விக்டோரியாவில் இரண்டு அந்நிய செலாவணி நிலையங்களில் இந்த மோசடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

1.3 மில்லியன் பவுண்ட் சொத்துக்களை கட்டியெழுப்பிய அந்த குடும்பலின் தலைவரான தயாபரனுக்கு Eastcote Lane, Harrow, பரிஸ், இந்தியா மற்றும் இலங்கையிலும் சொத்துக்கள் உள்ளது.

கடந்த வியாழக்கிழமை இந்த நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவரை மீண்டும் சிறைக்கு கொண்டு செல்வதற்கு முன்னர் அவரது சொத்துக்கள் பறிக்கப்படுவாக நீதிபதி அறிவித்துள்ளனர்.

Southwark Crown நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பளிக்கப்பட்டதன் பின்னர் HMRC மோசடி விசாரணை சேவையின் உதவி இயக்குனரான Nicol Sheppard கருத்து வெளியிட்டுள்ளார்.

“தீர்ப்பில் வழங்கப்பட்ட தகவல் தெளிவாக இருக்காது என்பதற்காக நான் விளக்க விரும்புகின்றேன். ஒருவர் தனது பதவியை பயன்படுத்தி ஒரு மோசடி செய்தால் அவரை சிறையில் அடைப்போம்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பண தூய்மையாக்கல் என்பது ஒரு தீவிரமான குற்றமாகும். தயாபரன் மற்றும் அவரது கூட்டாளிகள் போன்றவர்கள் மோசடியான பணத்தை சட்டப்பூர்வமாக்குவதன் மூலம் அதனை தக்க வைத்து கொள்கின்றனர்.

“பண மோசடியில் ஈடுபடுபவர்களை நாம் தொடர்ந்தும் பின் தொடர்ந்து செல்கின்றோம். சட்டத்தின் முழு சக்தியையும் அவர்கள் எதிர்கொள்வார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

111

2002 ஆம் குற்றச் சட்டத்தின் கீழ் தயாபரன் மூன்று மாதங்களுக்குள் 1,382,707 பவுண்டகளை செலுத்த வேண்டும் அல்லது மேலும் 7 அரை ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி Marc Dight உத்தரவிட்டுள்ளார்.

இந்த குற்ற செயல் தொடர்பில் 2015ஆம் ஆண்டு வழக்கு விசாரணையின் போது தயாபரனின் கும்பலின் உறுப்பினர்களான தில்லைநாதன் குமாரதாஸிற்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும், தினேஷ் குமார் ஆனந்தனுக்கு 2 வருட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டதுடன், 23,520.61 பவுண்ட் மற்றும் 37,500 பவுண்ட் பணமும் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

2222

லண்டன் பண பரிவர்த்தனை மூலம் பெரும் தொகை பணத்தை தூய்மையாக்குவதில் ராமநாதன் தயாபரன் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என CPS குற்ற விசாரணை அதிகாரி Sian Davies தெரிவித்துள்ளார்.