ஐ.நா உயர்மட்டக் குழுக்கள் இலங்கைக்கு வரவுள்ளன.

அடுத்த மூன்று மாதங்களுக்குள் ஐ.நாவின் இரண்டு உயர்மட்டக் குழுக்கள்  சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளன.

imagesஉண்மையை ஊக்குவித்தல், நீதி, இழப்பீடு, மீள நிகழாமையை உறுதிப்படுத்தல் தொடர்பாக ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர்  வரும், 10ஆம் நாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

அவர் ஒக்ரோபர் 23ஆம் நாள் வரையான காலப்பகுதியில் சிறிலங்காவில் தங்கியிருந்து பல்வேறு தரப்புகளையும் சந்தித்துப் பேசுவார். அத்துடன் சிறிலங்கா அரசாங்கத்துக்குத் தேவையான ஆலோசனைகளையும் வழங்குவார்.

அதேவேளை, நியாயமற்ற தடுத்து வைத்தல்கள் தொடர்பான ஐ.நா பணிக்குழு, சிறிலங்காவுக்கு டிசெம்பர் 4ஆம் நாள் சிறிலங்காவுக்கு வரவுள்ளது. டிசெம்பர் 15ஆம் நாள் வரை இந்தக் குழு சிறிலங்காவில் தங்கியிருக்கும்.

இந்த இரண்டு பயணங்களையும் சிறிலங்கா அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த ஜூலை மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர்கள் பென் எமர்சன், மோனிகா பின்டோ, ஜூவான் டென்டஸ் ஆகியோர், சிறிலங்காவில் சித்திரவதைகளும், மனித உரிமை மீறல்களும் தொடர்ந்து இடம்பெறுவதாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.