யுவதியின் கையில் உயிருடன் வாழும் இளைஞன்.

ஆசியாவில் முதல் முறையாக கை மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சாதனையை இந்தியாவின் கேரள மருத்துவ்ர்கள் நிலை நாட்டியுள்ளனர்.

images (7)இந்த கை மாற்று சிகிச்சையானது கேரளாவைச் சேர்ந்த 19 வயதான யுவதி ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்டது.

ஸ்ரேயா எனும் கேரளாவைச் சேர்ந்த யுவதி ஒருவருக்கு சச்சின் என்ற 20 வயது இளைஞரின் கை பொருத்தப்பட்டுள்ளது. குறித்த இளைஞர் விபத்து ஒன்றின்மூலம் மூளைச் சாவு அடைந்தார்.

குறித்த ஸ்ரேயா, டாட்டா நிறுவனத்தின் முக்கிய பொறுப்பு ஒன்றில் பணிபுரியும் நபர் ஒருவரது ஒரே மகளாவர். இவருக்கு கேரளாவிலுள்ள அம்ரித்தா மருத்துவமனையில் கை மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இவரது பொருத்தப்பட்ட கை இயக்கத்துக்கு வருவதற்கு ஒன்றிரண்டு வருடங்கள் ஆகலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உலகளவில் இந்த அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பத்து நபர்களில் ஸ்ரேயாவும் ஒருவராவார்.

ஸ்ரேயா கடந்த வருடம் பள்ளிக்குச் சென்றபோது பேருந்து விபத்து ஒன்றில் சிக்கி இரண்டு கைகளையும் இழந்துள்ளார்.