வவுனியா நீதிமன்றில் கடந்த 4 வருடங்களாக நடைபெற்ற வழக்கை, அநுராதபுரம் சிறப்பு நீதிமன்றத்துக்கு இடமாற்றியதை எதிர்த்து மூன்று தமிழ் அரசியல் கைதிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை ஆரம்பித்த போராட்டம் இன்று 6ஆவது நாளாகவும் தொடர்ந்தது. மூன்று அரசியல் கைதிகளில் ஒருவரான மதியரசன் சுலக்ஷன் அநுராதபுரம் சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்