பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் இன்று ஒளிபரப்பப்பட்டது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் இன்று ஒளிபரப்பப்பட்டது. இதில் வெற்றியாளராக ஆரவ் அறிவிக்கப்பட்டார்.

Untitled-2-8இரண்டாவது இடத்தை கவிஞர் சினேகன் தட்டிச்சென்றார். ஆனால், நேற்று முன்தினம் வரையும் சினேகன் வெற்றி பெறுவதற்கான வாக்குகள் வீதம் அதிகம் காணப்பட்டது.

அதற்கான அட்டவணை ஒன்றும் வெளியிடப்பட்டது. அப்படி இருக்க நேற்று ஆரவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

பிரபலங்களை வெளியுலக தொடர்பு இல்லாமல் 100 நாட்கள் வீட்டுக்குள் அடைத்து வைத்து ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை தனியார் டெலிவிஷனில் நடிகர் கமல்ஹாசன் நடத்தி வந்தார்.

நடிகர்கள் கணேஷ் வெங்கட்ராம், வையாபுரி, சக்தி, பரணி, கஞ்சா கருப்பு, ஸ்ரீ, ஆரவ், கவிஞர் சினேகன், நடிகைகள் நமீதா, ஓவியா, அனுயா, காயத்ரி ரகுராம், ரைசா, ஆர்த்தி மற்றும் ஜூலி ஆகியோர் இந்த நிகழ்ச்சியின் தொடக்க போட்டியாளர்களாக பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் நடிகை பிந்து மாதவி, சுஜா வருணி, ஹரிஷ் கல்யாண் மற்றும் காஜல் பசுபதி ஆகியோர் இடைப்போட்டியாளர்களாக சேர்க்கப்பட்டனர்.

பரபரப்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் பிக் பாஸ் பட்டத்தை ஆரவ் தட்டிச்சென்றார். இரண்டாம் இடத்தை கவிஞர் சினேகனும், மூன்றாம் இடத்தை நடிகர் ஹரிஷ் கல்யாணும் பெற்றனர்.

இந்த நிலையில் ஆரவ் வெற்றி பெற்றதற்கு பல்வேறு பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் ஆரவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டது பற்றி சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

சினேகன் வெற்றி பெறுவதற்கான வாக்குகள் காண்பிக்கப்பட்ட போதும் ஆரவ் எவ்வாறு வெற்றியாளராகினார் என்றா வினா எழுப்பப்பட்டுள்ளது. இதனால் பிக்பாஸ் ரசிகர்கள் சிலர் குழப்பத்தில் உள்ளனர்.