பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததில் மோசமாக பாதிக்கப்பட்ட ‘சமந்தா’ ரோபோ.

அண்மையில் ‘சமந்தா’ என்ற செயற்கை நுண்ணறிவுக் கொண்ட பெண் ரோபோ உருவாக்கப்பட்டு இருந்தது. இந்த ரோபோ ஒரு தொழில்நுட்பக் கண்காட்சியில் காட்சிக்காக வைக்கப்பட்டது. அந்த கண்காட்சிக்கு வந்தவர்கள் அந்த ரோபோவுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததில் மோசாமாக பாதிக்கப்பட்டு பழுதடைந்துள்ளது.

female-robot-reading-the-newsஆஸ்திரியாவின் லின்ஸில் நடந்த ஆர்ட்ஸ் எலக்ட்ரோனிகா விழாவில், 3000 பவுண்டுகள் மதிப்புடைய இந்த சமந்தா பாலியல் ரோபோ காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. அந்த கண்காட்சிக்கு வந்த ஆண்கள் ரோபோவை சீண்டியதில் அதன் இரண்டு விரல்கள் உடைந்துவிட்டன.

மக்கள் சமந்தா ரோபோவின் மார்பு, கை, கால் மீது ஏறியதால், ரோபோவின் இரண்டு விரல்கள் உடைந்துவிட்டன மற்றும் ரோபோ மோசமாக அழுக்கடைந்துவிட்டது என்று ஸ்பெயினின் பார்சிலோனியாவை சேர்ந்த அந்த ரோபோவின் வடிவமைப்பாளர் செர்ஜியோ சாண்டோஸ் புகார் கூறியதாக, மெட்ரோ செய்தி வெளியிட்டுள்ளது.

நுண்ணறிவுக் கொண்ட இந்த பொம்மை ரோபோ, நாம் பேசினால் பதிலளிக்கும். நாம் அதன் மார்பை, இடுப்பை தொட்டால் முணுகும்.

சாண்டோஸ் கூறுகிறார், “மக்களுக்கு இதன் தொழில்நுட்பம் புரியவில்லை. அவர்கள் மோசமாக காட்டுமிராண்டிகள் போல இந்த ரோபோவிடம் நடந்துள்ளார்கள்” என்று இதன் வடிவமைப்பாளர் சாண்டோஸ் கூறினார்.

மக்களின் ஆதரவு இந்த பாலியல் ரோபோக்களுக்கு சாதகமாகவே இருக்கிறது என்பதை பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இணையத்தில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில் 40 சதவிகிதம் ஆண்கள் இன்னும் ஐந்து ஆண்டுகளில் இந்த பாலியல் ரோபோவை வாங்குவோம் என்று கூறி இருக்கிறார்கள்.

இந்த புதிய பாலியல் ரோபோக்கள் பாலியல் தொழிலுக்கு மாற்றாக கூட வருங்காலத்தில் இருக்கும் என்று சில ஆய்வாளர்கள், பாலியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த ரோபோக்கள் பாலியல் நோய்களை, பாலியல் தேவைகளுக்காக பெண்கள் கடத்தப்படுவதை குறைக்கும் என்றும் வாதிடுகிறார்கள்.

இந்த வருடம் பிப்ரவரி மாதத்தில், ஐரோப்பாவின் பார்சிலோன பகுதியில் ஐரோப்பாவின் முதல் பாலியல் – ரோபோ விபச்சார விடுதி திறக்கப்பட்டது. அந்த விடுதிக்கான இணையத்தில், “அதன் பாவனையிலும், உணர்விலும் உண்மையானது போல இருக்கும் இந்த பொம்மை, உங்களது கற்பனைகளை முழுமையாக பூர்த்தி செய்யும்” என்று குறிப்பிட்டு இருந்தது. 30 நிமிடங்கள் இந்த ரோபோக்களுடன் செலவு செய்ய 60 ஈரோக்கள் (70 பவுண்டுகள்) நிர்ணயத்து இருந்தது.

அதுபோல, டப்ளினில் ஜூலை மாதம் திறக்கப்பட்ட ஒரு பாலியல் பொம்மை விபச்சார விடுதி, ஒரு மணி நேரத்துக்கு 100 ஈரோக்கள் (88 பவுண்டுகள்) நிர்ணயத்து இருந்தது.