வெளிநாட்டிலிருந்து விரட்டப்படும் இலங்கைக் குடும்பம்….

39 வயதான எரந்த ரணசிங்க ஆராச்சிகே, அவரது மனைவி மற்றும் அவரது 16 மாத வயதுடைய மகன் ஆகியோரை அடுத்து வரும் வாரங்களில் அவுஸ்திரேலியாவில் இருந்து வெளியேறுமாறு அந்நாட்டு குடிவரவு குடியகல்வு மற்றும் எல்லை பாதுகாப்பு திணைக்களத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

images (9)2007ஆம் ஆண்டு ரணசிங்கஆராச்சிகே உயர் கல்வி கற்பதற்காக அவுஸ்திரேலியா சென்றுள்ள நிலையில், hospitality துறையில் கல்வி கற்று, Braeside பிரதேசத்தில் அமைந்துள்ள, McDonald’s உணவகத்தில் முகாமையாளராக பணியாற்றியுள்ளார்.

எனினும் அவரது மனைவி மன ரீதியான சிக்கலில் பாதிக்கப்பட்டமையினால் அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க நேரிட்டுள்ளது.

இந்நிலையில் மனைவி மற்றும் தனது மகனை பார்த்துக் கொள்வதற்காக 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் தனது தொழிலில் இருந்து அவருக்கு விலக நேரிட்டுள்ளது.

அதன் பின்னர் பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் தனது குடும்பம் பாதிக்கப்பட்டதாக எரந்த ரணசிங்க ஆராச்சிகே தெரிவித்துள்ளார்.

“எனது வீடு தற்போது சிறைச்சாலை போன்று உள்ளது. எனது மனைவி மற்றும் பிள்ளைகளை பார்த்து கொள்வதனால் நான் வீட்டிலேயே சிறைப்பட்டுள்ளேன்.

குறைந்தபட்சம் எனது மகனுக்கு ஒரு விளையாட்டுப் பொருள் கூட இல்லை என அவர் தனது நிலைமையை விளக்கியுள்ளார்.

இந்நிலையில் கடந்த வருடம் நவம்பர் மாதம் அவுஸ்திரேலியாவின் குடிவரவு தொடர்பான அமைச்சர் Peter Dutton கலந்து கொண்ட தீபாவளி நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு ரணசிங்கவுக்கும் அழைப்பொன்று கிடைத்துள்ளது.

லிபரல் கட்சிக்காக நிதி சேகரிக்கும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த இரவு நிகழ்வின் ஒரு டிக்கட் கிட்டத்தட்ட 5000 டொலராகும் என அதன் ஏற்பட்டாளரான லிபரல் கட்சி உறுப்பினர் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

5000 டொலர் டிக்கட் கொள்வனவு செய்தால் அமைச்சர் Peter Dutton அருகிலேயே ஆசனம் ஒன்று பெற்றுக் கொள்ள முடியும் என ஸ்ரீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு ஆசனம் ஒன்று பெற்று கொண்டால் அமைச்சரிடம் பிரச்சினைகளை கூறி விடலாம் என ரணசிங்க எண்ணியுள்ளார்.

எனினும் அதுவரையிலும் அவுஸ்திரேலியாவில் நிரந்தர குடியுரிமை பெற்றுக் கொள்வதற்காக ரணசிங்க உட்பட தனது குடும்பம் 25000 டொலர் செலவிட்டுள்ளமையினால் 5000 டொலரை டிக்கட்டிற்கு செலுத்த நெருக்கடியான நிலையே அவருக்கு ஏற்பட்டுள்ளது.

எப்படியோ 2000 டொலர் டிக்கட் ஒன்றை கொள்வனவு செய்தவர் அமைச்சரை சந்தித்து தனது பிரச்சினையை கூறியுள்ளார்.

மீண்டும் விண்ணபிக்குமாறு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மீண்டும் விண்ணப்பிக்கும் அளவு பணம் இல்லாத நெருக்கடியில் உள்ள அவருக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எப்படியிருப்பினும் ரணசிங்க மீண்டும் விண்ணப்பிப்பதற்கு போராடி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.