யாழில் வீடு புகுந்து 14வயது சிறுமியை முத்தமிட்ட இளைஞன்

காதல் வெறியில் வீட்டினுள் புகுந்து சிறுமியை முத்தமிட்டு அட்டகாசம் புரிந்த நபரொருவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு யாழ் நீதிவான் நீதிமன்று நேற்று (29.09.2017) உத்தரவிட்டுள்ளது.

couple-conflict-over-kiss_SECVPF-190x122

இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, கோப்பாய் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவன் அப்பகுதியை சேர்ந்த 14 வயதுடைய சிறுமி ஒருவரின் வீட்டுக்கு சென்று, அவரை தான் காதலிப்பதாகவும், அவருடன் கதைக்க வேண்டுமெனவும் கூறியுள்ளான்.அதற்கு வீட்டார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து வீட்டிலுள்ள கண்ணாடி ஜன்னல்களை குறித்த இளைஞன் அடித்து நொருக்கியதுடன், வீட்டிலிருந்தவர்களையும் தாக்கியுள்ளான்.

பின்னர் வீட்டிற்குள் புகுந்து குறித்த சிறுமியை முத்தமிட்டுள்ளான்.

இச்சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர் அவன் பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டான்.

அவனை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் சி, சதீஸ்தரன் உத்தரவிட்டுள்ளார்.