வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை தென் இலங்கை அரசியவாதிகள் அதிகளவில் விமர்சிப்பதற்கான காரணத்தை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச வெளியிட்டுள்ளார்.
அரசியல் சந்திப்புகளுக்காக யாழ்ப்பாணம் சென்றுள்ள அவர், யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போது இதனை கூறியுள்ளார்.
இந்த ஊடகவிலாளர் சந்திப்பின் போது “தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட கூட்டமைப்பை விமர்சிப்பதை விட, வடமாகாண முதலமைச்சரை தென் இலங்கை அரசியல்வாதிகள் அதிகமாக விமர்சிக்கின்றமைக்கு காரணம் என்னவென்று” ஊடகவிலாளர் ஒருவர் கேள்வியெழுப்பியிருந்தார்.
இதற்கு பதிளலித்து பேசிய அவர், “இது குறித்து எனக்கொன்றும் தெரியாது. இருந்தும் வடக்கு மக்கள் மீது முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அதிகளவு அக்கறை கொண்டுள்ளார்.
இதன் காரணமாகவே, அவர் அதிகளவு விமர்சிக்கப்படலாம் என்ற சந்தேகம் எழுகின்றது. மக்களின் பிரச்சினைகளை பேசி தீர்பதற்கே பொதுஜன பெரமுன யாழப்பாணம் வந்துள்ளது.
கடந்த அரசாங்கம் 80 வீதமான நிலங்களை விடுவித்திருந்தது. ஆனால் தற்போதைய அரசாங்கம் மீள்குடியேற்றம் செய்வதையே தாமதப்படுத்தி வருகின்றது.
இந்நிலையில், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பொதுஜன பெரமுன முன்னிருந்து செயற்படும். அத்துடன், யாழ்ப்பாணத்துக்கு அனைத்து நவீன தொழில்நுட்ப வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.