மின்சாரம் தாக்கி வௌிநாட்டவர் பலி. சடலம் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில்.

கப்பல் ஒன்றில் வைத்து மின்சாரம் தாக்கியதில் வௌிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
images (11)
ஈரானில் இருந்து இந்தியா நோக்கி பயணித்த கப்பல் ஒன்றில் இருந்த வௌிநாட்டவர் ஒருவரே இவ்வாறு மின்சாரத் தாக்குதலுக்கு இலக்கான நிலையில், ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பலியாகியுள்ளார்.

இவர் துருக்கி நாட்டைச் சேர்ந்த 24 வயதான ஒருவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சடலம் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.