பிக் பொஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகத்தை விஜய் தொகுத்து வழங்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிக் பொஸ் நிகழ்ச்சியின் முதல் பாகம் நேற்று முடிவுற்றுள்ள நிலையில் இவ்வாறு தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிகழ்ச்சியின் முதல் பாகத்தை கமல் ஹாசன் தொகுத்து வழங்கி 100 நாட்களை கடந்து நிறைவு பெற்றிருந்தது. இதில் ஆரவ் வெற்றியாளராகவும் அறிவிக்கப்பட்டிருந்தார்.
முதல் பாகத்தை தொகுத்து வழங்கிய கமல் ஹாசன் அரசியலில் ஈடுபடவுள்ளதனால் பிக் பொஸ் இரண்டாம் பாகத்தை அவர் தொகுத்து வழங்குவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிக் பொஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது பாகத்தை தளபதி விஜய் தொகுத்து வழங்கப் போவதாக சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
தற்போது திரைப்படங்களில் பிசியாக இருக்கும் விஜய் பிக் பொஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.