நாட்டில் பண வீக்கம் அதிகரித்துள்ளதாகவும், வறுமை நிலை 12.3 சுட்டெண்ணாக உயர்வடைந்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த 2014ம் ஆண்டு 7.6ஆக இந்த சுட்டெண் காணப்பட்டதாகவும், உலக சந்தையில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் குறைந்ததன் காரணமாக, வறிய நிலை சுட்டெண் கடந்த 2015ம் ஆண்டு 5.6 வீதமாக குறைந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.
எனினும், தற்போது இது அதிகரித்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கிராமிய மக்கள் கடனை திருப்பி செலுத்த முடியாத சிரமத்தில் வாழ்ந்து வருகின்றனர் எனக் குறிப்பிட்டுள்ள பந்துல, சதோச ஊடாக 25 பொருட்களின் விலைகளை குறைத்து விற்பனை செய்ய எடுத்த முயற்சி பயனற்றது எனவும் கூறியுள்ளார்.
அத்துடன், நாட்டில் தற்போது அரிசி மற்றும் தேங்காய் மாஃபியா காணப்படுகிறது. இதனை நிறுத்த அரசாங்கம் முயற்சி எடுப்பதில்லை எனவும் பந்துல குணவர்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.