வைத்திய டிப்ஸ்!

ஜலதோஷம், தும்மல் இருந்தால், கொஞ்சம் இஞ்சியும், ஒரு பிடி துளசி இலையும் போட்டுக் கொதிக்க வைச்சு, பாதியாக வற்றியதும், ரெண்டு ஸ்பூன் தேன், கால் ஸ்பூன் லெமன் ஜூஸ் சேர்த்துக் குடிங்க. ரெண்டே நாளில் சரியாயிடும்.

983883_1465971503479420_2926304105348576333_n

 

மிளகைக் கொதிக்கவைச்சு, வடிகட்டி தேன் சேர்த்துக் குடிங்க. சளி சட்டென விலகும்.

நாட்டு மருந்துக் கடையில் ‘பாதாம் பிசினி’னு விற்கும். அதை வாங்கி, தண்ணீரில் போட்டுவைச்சு, நல்லா ஊறினதும் ‘புசுபுசு’னு வரும். அந்தத் தண்ணியை வடித்துவிட்டு, பாதாம் பிசினியை, பால், சர்க்கரை சேர்த்துக் குடிக்கலாம். ரோஸ்மில்க் சேர்த்தும் குடிக்கலாம். உடல் உஷ்ணத்தால் வர்ற வாய்ப் புண் குணமாகும்.
மோரும், லெமன் ஜூஸ் எவ்வளவு முடியுமோ அவ்வளவு குடிக்கலாம். உடலுக்கு ரொம்பவே நல்லது.

சிறிது சீரகத்துடன் கீழாநெல்லி வைத்து அரைத்து எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர கல்லீரல் கோளாறு குணமாகும்.