உள்ளுராட்சி மன்ற தேர்தல் திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்துவரும் ஒன்றிணைந்த எதிர்கட்சியினர், திருத்த சட்டமூலத்திற்கு எதிராக இன்றும் நாளையும் உயர் நீதிமன்றில் 7 மனுக்களை தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் கூற்றினை பிவித்துரு ஹெல உறுமையவின் பொதுச் செயலாளர் உதய கம்மன் பில உறுதிப்படுத்தியுள்ளார்.
ஏற்கனவே முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வா உயர் நீதிமன்றில் அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் பழைய முறைப்படி தேர்தலை நடத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு பணிப்புரை விடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.